நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் சில பழங்களை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. அந்த பழங்களை பற்றி இங்கே காணலாம்.
நீரிழிவு நோயாளிகள் மறந்தும் அன்னாசிப்பழத்தை உட்கொள்ளக் கூடாது. இதில் கார்போஹைட்ரேட்ஸ் அதிக அளவில் உள்ளன. இது திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
லிச்சி பழம் சுகர் நோயாளிகளுக்கு ஆபத்தாகலாம். இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்க கூடியது.
வாழைப்பழம் பலவித ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதாக இருந்தாலும் இதன் கிளைசிமிக் குறியீடு மிக அதிகமாக இருப்பதால் இதை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கக் கூடிய சப்போட்டா பழத்தை சுகர் நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் மறந்தும் உலர்ந்த கஜூர் பழங்களை உட்கொள்ள வேண்டாம். இது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக்கூடும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.