வளர்சிதை மாற்றம் என்பது உடலின் ஒரு முக்கிய செயல்பாடு, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சில ஆரோக்கியமற்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்
உடல் எடை குறைய வளர்ச்சிதை மாற்றம் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லை என்றால் என்ன செய்தாலும் உடல் பருமன் குறையாது.
பொரித்த உணவுகள், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், மைதாவினால் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவை வளர்ச்சிதை மாற்றத்தை பெரிதும் பாதிக்கும்.
நார் சத்து ஏதும் இல்லாத, துரித உணவுகளை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை பெரிதும் பாதிக்கும்.
தூக்கமின்மை வளர்சிதை மாற்றத்தை பெரிதும் பாதிக்கிறது.
சோம்பல், உடல் இயக்க இல்லாத நிலை, உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், உடலின் மெட்டபாலிசம் மிகவும் பலவீனமாகிவிடும்.
மெட்டபாலிஸத்தை அதிகரிக்க தண்ணீர் போதுமான அளவு அருந்துவது மிக முக்கியம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.