டீ உலகம் முழுவதும் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஒரு பானம் ஆகும். ஆனால் இது உண்மையில் நல்லதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி டீ குடித்தால் உங்களின் தூக்க சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக இரவு நேரத்தில் டீ குடித்தால்.
ஒரு நாளில் அதிக அளவு டீ குடிப்பது உங்களது மன கவலையை அதிகரிக்க செய்யும்.
தினசரி டீ குடிப்பதால் உடலில் டையூரிடிக் விளைவுகள் ஏற்படலாம். இது நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
தலைவலிக்கு டீ குடித்தால், அது வலியை மேலும் அதிகரிக்க செய்யலாம். ஏனெனில் காஃபின் தலைவலியை ஏற்படுத்தும்.
டீ அதிகம் குடிக்கும் போது உடலில் நெஞ்செரிச்சல், வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
டீ குடித்தால் மன அழுத்தம் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது அமைதியின்மையை ஏற்படுத்துகிறது.
தினமும் சாப்பிட்ட பின்பு டீ குடிப்பது உங்கள் செரிமானத்தை பலவீனப்படுத்தும்.