மருத்துவத்திலும் ஆயுர்வேதத்திலும் முக்கியமாக கருதப்படும் கிராம்புடன் நாளைத் தொடங்கினால் கிடைக்கும் நன்மைகள் வியக்க வைக்கும்.
காலையில் எழுந்தவுடன் இரு கிராம்பை வாயில் அடக்கிக் கொள்ளலாம் அல்லது கிராம்பை தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்தும் குடிக்கலாம்.
மன அழுத்த எதிர்ப்பு பண்பு கொண்ட கிராம்பினை காலையில் எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் நிதானமாகவும் அமைதியாகவும் செயல்படுவீர்கள்
கல்லீரல் தான் உடலை நச்சுத்தன்மையை நீக்குகிறது. கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
கிராம்புகளில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
கிராம்பில் ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு மற்றும் யூஜெனோல் எலும்பு அடர்த்தியை அதிகரித்து, எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
கிராம்புகளில் இருக்கும் யூஜெனோல் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தலைவலிக்கு தீர்வு தருகிறது.
கிராம்பு சுவாசக் குழாயில் உண்டாகும் அழுத்தத்தை தணித்து, பாக்டீரியாக்கள் நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுப்பதால், ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு பெரிதும் உதவும்.
கிராம்பு உங்கள் உடலில் இன்சுலின் போல வேலை செய்து இரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்குகிறது.
கிராம்பில் யூஜெனால் உள்ளதால் தினமும் வாயில் கிராம்பை அடக்கிக் கொண்டால் பல்வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
கிராம்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை நீக்கும்.