நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம்.
உடலில் உள்ள அழுக்குகளையும் நச்சுக்களையும் நீக்குவதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதிலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது.
கல்லீரலில் நோய் உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.
கல்லீரல் சேதமடைவதற்கு முன், உடலில் தோன்றும் பல வகையான அறிகுறிகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கல்லீரல் பாதிப்பினால், உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாத போது, வாந்தி குமட்டல் உணர்வை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் சரியாக செயல்படாதபோது, கழிவு பொருட்கள் வெளியேற்றப்படுவதில்லை. எனவே, பிலிரூபின் அளவு அதிகரித்து, தோல் மற்றும் கண்களின் மஞ்சள் நிறம் ஏற்படும்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கால் வீக்கம் என்பதால், இதுபோன்ற நிலையை அலட்சியம் செய்யாதீர்கள்.
சிறுநீர் தொடர்ந்து அடர் நிறத்திலிருந்தால், அதை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும்.
அடிக்கடி சோர்வாக இருப்பது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும்.