பைல்ஸ் எனப்படும் மூல நோய், இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு நோயாக உருவெடுத்து வருகிறது.
இதனால் மலம் கழிக்கும்போது வலி, அசௌகரியம் மற்றும் எரிச்சல் ஏற்படுகின்றது.
மலக்குடல் பகுதியில் உள்ள நரம்புகளின் வீக்கம் காரணமாக இது ஏற்படுகிறது.
பைல்ஸ் நோயை சிறந்த முறையில் சமாளிக்க உதவும் சில உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தவிட்டு தானியங்கள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், முழு கோதுமை போன்ற முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. இவை மலத்தை மென்மையாக்குகின்றன.
ப்ரோக்கோலி, முளை கட்டிய தானியங்கள், கேரட், பிரஸ்ஸல்ஸ் முளைகள், முட்டைக்கோஸ், தக்காளி, அஸ்பாரகஸ், காலிஃபிளவர், வெங்காயம், வெள்ளரி ஆகியவை பைல்ஸ் நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய சில காய்கறிகளாகும்.
ஆப்பிள், கொடிமுந்திரி, திராட்சை, பெர்ரி போன்ற பழங்களை தோலுடனும் பப்பாளி, வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை தோல் இல்லாமலும் சாப்பிடுவது நல்லது.
ராஜ்மா, காராமணி, பச்சை பட்டாணி, மொச்சை ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பைல்ஸ் நோயாளியின் வழக்கமான உணவில் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
பைல்ஸ் சிகிச்சைக்கு தண்ணீர் இன்றியமையாதது. குடல் இயக்கம் சீராக இருக்க தினமும் குறைந்தது 6-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.