நீரிழிவு நோய் இன்றைய காலகட்டத்தில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது.
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் மாற்றங்களைச் செய்து அதை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் உட்கொள்ள வேண்டிய சில பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருக்கும் முழு தானியங்கள் மெதுவாக ஜீரணமாகி இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகின்றன.
ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியமானது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகள் உணவில் லேசான புரதத்தை சேர்த்துக்கொள்ளலாம். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும்.