எளிதில் கிடைக்கக்கூடிய ஆப்பிளில் பெக்டின் சத்து அதிகம் உள்ளது, இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
பிளாக்பெர்ரி எல்டிஎல் கொலஸ்ட்ரால் ஆக்ஸிஜனேற்றப்படுவதைத் தடுக்கிறது.
இந்த பழத்தில் ஆன்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை குறைக்கக்கூடியவை.
கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
அவகேடோவை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என பல ஆய்வுகளில் நிரூபனமாகியுள்ளது.
அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமிலைன், தமனிகளில் சேரும் கொழுப்பை உடைத்து, அதை நீக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
அறிக்கைகளின்படி, திராட்சை அனைத்து கெட்ட கொலஸ்ட்ராலையும் கல்லீரலுக்குள் கொண்டு செல்ல உதவுகிறது, அங்கு அது பதப்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் வகை பழங்களில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இந்த பழங்களை தினமும் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவு குறைக்கப்பட்டு உடலும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றொரு சிட்ரஸ் பழம் இது. அவை இயற்கையாகவே அதிக வைட்டமின் சி அளவைக் கொண்டுள்ளன மற்றும் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.
பிளம்ஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதனால் இதயத்திற்கு நல்லது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.