முதலீட்டுக்கு SIP பலரும் தேர்வு செய்யும் வழியாகும். இதன்மூலம் முதலீடு செய்தால் முதலீட்டுக்கு சராசரியாக 12% வருவாய் கிடைக்கும்.
SIP மூலம் உங்களுக்கு ஏற்ற கால இடைவெளியில் முதலீட்டை தொடங்கலாம். மாதந்திர, காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர முறையில் முதலீடு செய்யலாம்.
சந்தை வீழ்ச்சியில் இருந்தால் SIP மூலம் மியூச்சுல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது அதிக யூனிட்டுகளை பெறுவீர்கள். சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் நஷ்டம் குறையும்.
ரூ.100 முதல் இதன்மூலம் முதலீடு செய்ய தொடங்கலாம். இதில் அதிகபட்சம் என்ற வரையறையே கிடையாது.
வருமானம் அதிகரிக்கும்போது, SIP மூலம் முதலீடு செய்யும் தொகையையும் அதிகரிக்கவும்.
நீண்ட காலம் இதன்மூலம் முதலீடு செய்தால் கூட்டு வட்டி மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
SIP முதலீடு செய்யும் ஒழுக்கத்தையும், சேமிப்பு பழக்கத்தையும் கற்றுத்தரும்.