பர்சனல் லோன் வாங்குமுன் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
அடமானமில்லா லோன்கள் மீதான ரிஸ்க் விகிதத்தை தற்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதிகரித்துள்ளது.
பர்சனல் லோன்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதன் காரணமாக RBI இந்த முடிவை எடுத்துள்ளது.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா எடுத்துள்ள இந்த புதிய முடிவின் காரணமாக வட்டி விகிதங்கள் அதிகரிப்பு
எனவே, லோன்கள் பெறுவதற்கு இனி கடன் பெறுபவர்கள் அதிக கிரிடிட் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.
அதாவது, இனி வரும் காலங்களில் 700 -க்கும் அதிகமான ஸ்கோர் நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படுகிறது.
நீங்கள் பர்சனல் லோன் வாங்க திட்டமிட்டால் வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து ஒன்றை தேர்வு செய்யவும்
உங்களிடம் கிரெடிட் குறைபாடு இருப்பதை காட்ட வேண்டாம்:
பல்வேறு கடன் வழங்குனர்களுக்கு நேரடியாக லோன் அப்ளிகேஷன்களை வழங்குவதை தவிர்க்கவும். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
அதனால், லோன் வழங்கும் வங்கியை சரியாக தேர்வு செய்து குறிப்பிட்ட வங்கியிடம் மட்டும் அப்ளை செய்யுங்கள்.
லோன் எதற்காக வாங்குகிறீர்கள் என்பதையும், எப்படி கட்டப்போகிறீர்கள் என்பதையும் தெளிவாக தெரிவிக்கவும்.
அதனால் உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு பர்சனல் லோன்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.