நிதி பரிவர்த்தனைகள் செய்யப்படும் விதத்தில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய நான்கு குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது.
UPI இல் "டெலிகேட்டட் பேமெண்ட்ஸ்" என்ற புதிய அம்சத்தை இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகளில் ஒன்றாக உள்ளது.
இந்த அம்சத்தின் மூலம், வங்கிக் கணக்கின் முதன்மைப் பயனர், குடும்ப உறுப்பினர் போன்ற இரண்டாம் நிலைப் பயனருக்கு, அவரது சார்பில் UPI பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்.
செக் ட்ரங்கேஷன் சிஸ்டம் (Cheque Truncation System) தொடர்பான அப்டேட்டும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தற்போது, CTS ஒரு காசோலையைச் செயல்படுத்த இரண்டு நாட்கள் வரை ஆகலாம்.
இருப்பினும், புதிய புதுப்பிப்புகள் மூலம், காசோலைகள் சில மணி நேரங்களுக்குள் செயல்படுத்தப்படும் என ஆர்பிஐ முன்மொழிந்துள்ளது.
கடன் வழங்கும் செயலிகளை அதாவது டிஜிட்டல் லெண்டிங் செயலிகளை பற்றிய கவலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயலிகளின் மோசடிகளை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சரிபார்க்கப்பட்ட டிஜிட்டல் லெண்டிங் ஆப்ஸ்களுக்கான (DLAs) பொது தரவுத்தளத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
யுபிஐ மூலம் செய்யப்படும் வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்பை ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அதிக வரி செலுத்துவோர் தங்கள் வரி செலுத்துதலுக்கு UPI ஐப் பயன்படுத்தலாம்.