பலரும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களுக்கு தினசரி உணவு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் தெரு நாய்களுக்கு சில உணவுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அதிக செயற்கை இனிப்புகளை கொண்ட பிஸ்கட், மிட்டாய்கள் போன்றவற்றை தெரு நாய்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும்.
இவற்றை நாய்கள் சாப்பிடும் போது கடுமையான கல்லீரல் நோய், இரத்த உறைதல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
தெரு நாய்களுக்கு பால் சார்ந்த பொருட்களை வைக்கும் போது, அவற்றிற்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
பூண்டு, வெங்காயம் நிறைந்த உணவுகளை தெரு நாய்களுக்கு கொடுத்தால் அவற்றிற்கு இரத்த சிவப்பணுக்கள் மற்றும் இரத்த சோகையை ஏற்படுத்தும்.
வீட்டில் மீந்துபோன உருளைக்கிழங்கை நாய்களுக்கு கொடுத்தால், அவற்றிற்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும்.