ஏடிஎம் கார்டில் இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க..!
ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்தே பணப் பரிவர்த்தனைகள் செய்வது இப்போது அதிகமாகிவிட்டது.
இது பணப்பரிவர்த்தனைக்கு ஈஸியாக இருந்தாலும், சில இடங்களில் இந்த கார்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது பாதுகாப்பற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டாம்.
இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் பணத்தை திருட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் ஷாப்பிங்கில் இந்த மோசடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அறக்கட்டளைக்காக நிதியுதவி பெற யாராவது அணுகினால், உங்கள் ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பொது இடங்களில் உள்ள கணினியைப் பயன்படுத்தும்போது அதில் உங்களுடைய ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டாம்.
யாரிடம் மொபைல் மூலமாக பேசும்போதும் உங்களுடைய கார்டு விவரங்களைக் கூற வேண்டாம்.
ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு இடத்திலும் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
உங்களுடைய கார்டு விவரங்களை வேறு யாராவது தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்ய வாய்ப்பு உள்ளது.