பெட்ரோல் டீசல் விலைகள் நம் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் பெட்ரோல் விலைகள் பல நகரங்களில் சுமார் 100 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.
குறைந்த விலை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் ஈரான் உள்ளது. இங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.029 டாலர் அதாவது 2.42 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
லிபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.031 டாலர் அதாவது 2.58 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
வெனிசுலாவில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 0.035 டாலர், அதாவது 2.93 ரூபாய் என்ற அளவில் உள்ளது
மிக அதிக அளவு பெட்ரோல் விலை உள்ள நாடுகளில் ஹாங்காங் முதலிடம் வகிக்கிறது. இந்திய ரூபாயில் லிட்டர் 259 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டர் 104 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் மிகக் குறைந்த அளவாக, போர்ட் பிளேயர்-ல் லிட்டர் 84.10 ரூபாய் என்ற அளவில் பெட்ரோல் விற்கப்படுகிறது