நம் உடலில் இருக்கும் பல முக்கியமான உறுப்புகளில் நுரையீரலும் ஒன்றாகும். இதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நுரையீரலை சேரும் நச்சுகளை நீக்கி அதை ஆரோக்கியமாக வைக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள கீரையில் நுரையீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
மஞ்சளில் உள்ள குர்குமின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நுரையீரலில் சேர்ந்துள்ள நச்சுகளை அகற்ற உதவும்.
க்வெர்செடின் என்ற இயற்கை ஆண்டிஹிஸ்டமைன் உள்ள ஆப்பிள் ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சுவாசப்பாதை வீக்கத்தைக் குறைக்கும், நுரையீரலை பாதுகாக்கும்.
இஞ்சி அழற்சி எதிர்ப்பு மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி விளைவுகளைக் கொண்டுள்ளது. இது ஆஸ்துமாவை சரி செய்து, மூச்சுக்குழாவை சீராக வைத்து நுரையீரலை பாதுகாக்கிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ நுரையீரல் மற்றும் ஒட்டுமொத்த சுவாச அமைப்பை பாதுகாக்கிறது.