மத்திய அரசாங்கம் இன்னும் இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) கணக்கில் வட்டித் தொகையை செலுத்தவில்லை.
பிஎஃப் வட்டி தொகை டெபாசிட் செய்யப்படுவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்
இன்னும் சில நாட்களில் வட்டித்தொகை இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscribers) கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.
இதன் மூலம் சுமார் 7 கோடி பணியாளர்களுக்கு நன்மை கிடைக்கும்.
Epfo 2023-24 நிதியாண்டிற்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை ஆண்டுக்கு 8.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த வட்டித் தொகை பிஎப் பொறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து கணக்கு இருப்பை தெரிந்து கொள்ளலாம்.
அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்று எண்ணுக்கு SMS அனுப்பியும் இதை அறியலாம்.
EPFO வட்டித் தொகை டெபாசிட் செய்யப்படும் தேதி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.