ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்.... யாருக்கு எவ்வளவு விதிக்கப்படும்?

Sripriya Sambathkumar
Jun 30,2024
';

வருமான வரி கணக்கு தாக்கல்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்தத் தேதிக்குள் உங்கள் ITR ஐ நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டும்.

';

ஐடிஆர் தாக்கல்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தவறவிட்டதற்காக அனைவரும் அபராதம் செலுத்த வேண்டியதில்லை. வருமான வரிச் சட்டத்தின்படி, யார், எவ்வளவு அபராதம் செலுத்துவது, யார் செலுத்தக்கூடாது என்பது தீர்மானிக்கப்படுகிறது.

';

அபராதம்

ஒருவர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் கடைசித் தேதிக்குப் பிறகு ரிட்டன் தாக்கல் செய்தால், அது தாமதமான ஐடிஆர் தாக்கல் எனப்படும். இந்த நிலையில் வரி செலுத்துவோர் ரூ.5000 அபராதம் செலுத்த வேண்டும்.

';

வரி செலுத்துவோர்

வரி செலுத்துவோரின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் ரூ.1000 அபராதம் செலுத்த வேண்டும்.

';

வருமான வரி கணக்கு

ஏதேனும் வரிப் பொறுப்பு இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது அவ்வாறு இல்லை. வரிப் பொறுப்பு இல்லாவிட்டாலும், கடைசி தேதிக்குப் பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டும்.

';

வரி விலக்கு

உங்கள் வருமானம் வரி விலக்கு வரம்பை விட (பழைய வரி முறையில் ரூ. 2.5 லட்சம்) குறைவாக இருந்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.

';

ITR

உங்கள் வரி விதிக்கக்கூடிய வருமானம் வரி விலக்கு வரம்பை விட குறைவாக இருந்தால், நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யத் தேவையில்லை.

';

Old Tax Regime

பழைய வரி முறையில், 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டது. 60-80 வயதுடையவர்களுக்கு ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கும் வரிவிலக்கு உண்டு.

';

New Tax Regime

புதிய வரி முறையில் அனைத்து வயதினைச்சார்ந்த வரி செலுத்துவோருக்கும் இந்த வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது.

';

VIEW ALL

Read Next Story