டி20 உலகக்கோப்பை : பும்ரா படைத்த மகத்தான சாதனை..!
இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது.
அத்துடன் கடந்த 10 வருடங்களாக அனைத்து விதமான ஐசிசி தொடர்களிலும் சந்தித்து வந்த அவமான தோல்விகளையும் இந்தியா உடைத்துள்ளது.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா மிக முக்கிய காரணமாக இருந்தார். அபாரமாக பந்து வீசிய அவர் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.
இந்த தொடர் முழுவதும் அசத்திய பும்ரா மொத்தம் 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 4.17 என்ற எக்கனாமியில் எடுத்தார்.
இதன்மூலம் ஒரு டி20 உலகக் கோப்பையில் மிகவும் குறைந்த எக்னாமியை பதிவு செய்த வீரர் என்ற சுனில் நரேனின் 10 வருட சாதனையை உடைத்த ஜஸ்ப்ரித் பும்ரா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் கடந்த 2014 டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சுனில் நரேன் 4.60 எக்கனாமியை பதிவு செய்திருந்ததே முந்தைய சாதனையாகும்.
அப்படி தொடர் முழுவதும் அசத்திய அவர் 2024 டி20 உலகக் கோப்பையின் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்நாயகன் விருதை வென்ற முதல் பந்து வீச்சாளர் என்ற மாபெரும் உலக சாதனையையும் ஜஸ்ப்ரித் பும்ரா படைத்துள்ளார்.