பெண்களுக்கான ‘சில’ சிறந்த சிறு சேமிப்பு திட்டங்கள்!

Vidya Gopalakrishnan
Sep 25,2023
';

சேமிப்பு திட்டங்கள்

குடும்ப தலைவிகள் தங்களுக்கெனவும், குழந்தைகளுக்காகவும் ஒரு சிறு பகுதியை இன்று சேமித்து வைத்தால் எதிர்கால வாழ்க்கை வளமடையும்.

';

சிறு சேமிப்பு திட்டங்கள்

பெண்களுக்கென மத்திய அரசு மற்றும் வங்கிகள் தரும் சிறப்பான சிறு சேமிப்பு திட்டங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

';

மகிளா சம்மான்

மத்திய அரசின், பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டமான 'மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்' திட்டத்தில் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை சேமிக்கலாம்.

';

7.5% வட்டி

மகிளா சம்மான் சேமிப்பு திட்ட முதலீட்டிற்கு 7.5% நிலையான வட்டி கிடைக்கும். மேலும், இதில் முதலீடு செய்த பணத்தில் பகுதியளவு தேவைக்கு எடுக்கும் சலுகையும் உண்டு.

';

செல்வ மகள் சேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கான மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், மாதம் குறைந்த பட்சம் ரூ.50 முதலீட்டில் கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளின் 9 வயதுக்குள் கணக்கை தொடங்கிவிட வேண்டும்.

';

செல்வமகள் சேமிப்பு - வட்டி

கணக்கு தொடங்கப்படும் நாளில் இருந்து 15 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 7.6 % திலிருந்து 8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

';

தங்க நகை

இல்லத்தரசிகள் சிறு தொகையை நம்பிக்கையான நகைக்கடைகளில் செலுத்தி குறிப்பிட்ட மாத முடிவில் செய்கூலி, சேதாரமின்றி நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

';

தொடர் வைப்பு கணக்கு

தபால் அலுவலகத்திலும், அனைத்து வங்கிகளிலும் தொடர் வைப்பு கணக்கு (RD) சேமிப்பு திட்டத்தில், 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் மாதம் 500ரூ முதல் சேமித்து வரலாம்.

';

VIEW ALL

Read Next Story