SIP மூலம் சிறிய தொகை கொண்டு முதலீட்டை தொடங்கலாம்.
SIP மூலம் கிடைக்கும் வருமானம் சந்தையுடன் தொடர்புடையது
நீண்ட காலத்திற்கு SIP -இல் பணம் முதலீடு செய்வதன் மூலம் சராசரியாக 12% வரையிலான ரிடர்ண் கிடைக்க வாய்ப்புள்ளது.
புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் தங்கள் முதல் சம்பளத்தில் இருந்தே SIP -இல் முதலீடு செய்யத் தொடங்குவது நல்லது.
20-30 ஆண்டுகளுக்கு SIP -இல் முதலீடு செய்து வந்தால் பெரிய தொகையை ஈட்டலாம்.
சந்தையின் ஏற்ற இறக்கங்களை பார்த்து SIP -இல் முதலீடு செய்வதை மாற்றாமல் இருக்க வேண்டும். சந்தையில் இறக்கங்கள் இருக்கும்போதெல்லாம் SIP -இல் அதிக யூனிட்டுகள் கிடைக்கின்றன. இதனால் ரிடர்ண் அதிகமாகிறது.
வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம் SIP இல் முதலீடு செய்யும் தொகையையும் அதிகரிக்க வேண்டும். உங்கள் முதலீட்டின் இலக்கை தேர்வு செய்த பிறகு ஸ்மால், மிட் மற்றும் லார்ஜ் கேப் ஃபண்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.