வங்கிகளின் பயன்படுத்தப்படும் காசோலைகளில் 7 வகைகள் உள்ளன, அவற்றைப் பற்றி பலருக்கும் தெரியாது... யார் எந்தவிதமான காசோலையை பயன்படுத்தலாம்?
பொதுவாக வங்கிகளில் பணத்தை எடுக்கவும், பிறருக்கு பணத்தைக் கொடுக்கவும் பயன்படும் காசோலை Bearer Cheque என அறியப்படுகிறது
ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு கொடுக்கப்படும் காசோலை Order Cheque என்று அறியப்படுகிறது.
Crossed Cheque எனப்படும் இந்த காசோலையின் மேல் இடது மூலையில் இரண்டு இணையான கோடுகள் வரையப்பட்டிருக்கும். இந்த காசோலையை வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும், பணம் வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும்
வெளிநாட்டில் விடுமுறைக்கு செல்லும் போது பயணிகள், Traveller’s Cheque என்ற காசோலையை பயன்படுத்தலாம். இந்த காசோலைகள் மூலம், அவர்கள் வேறொரு நாட்டில் உள்ள ஒரு வங்கியிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.
வணிகத்தில் அல்லது பிற்காலத்தில் பணம் செலுத்த வேண்டியவற்றுக்கு கொடுக்கப்படும் காசோலை Post-Dated Cheque ஆகும்.
காசோலைகள் தொடர்பான இந்தக் கட்டுரை தகவல்களை மக்கள் தெரிந்துக் கொள்வதற்காக மட்டுமே எழுதப்பட்டது. இதிலுள்ள தகவல்களை ஜீ மீடியா தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை
ஒரு நபர் ஒரு காசோலையில் Cancelled என்று எழுதி, காசோலையின் இரு மூலைகளையும் இணைத்து Cancelled என்பதற்கு மேலேயும் கீழேயும் ஒரு கோட்டை வரைந்தால், அது ரத்து செய்யப்பட்ட காசோலையாகக் கருதப்படுகிறது. பொதுவாக இந்த காசோலைகள் KYC இல் பயன்படுத்தப்படுகின்றன