EPFO உயர் ஓய்வூதியம் (EPFO Higher Pension) தொடர்பான பணிகளை செய்து முடிக்க முதலாளிகள் / நிறுவனங்களுக்கான கடைசி தேதியை 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இப்போது முதலாளிகள் அதாவது நிறுவனங்கள் 31 டிசம்பர் 2023 வரை ஊழியர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவு விவரங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
முன்னதாக, உயர் ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டுப் படிவத்தை சரிபார்ப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30, 2023 வரை இருந்தது.
பல முதலாளிகள் / நிறுவனங்கள் கூட்டு விருப்பப் படிவத்தை சரிபார்க்க காலக்கெடுவை நீட்டிக்குமாறு தொழிலாளர் அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தனர்
இபிஎஃப்ஓ இணையதளத்தில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதாகவும், விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு விவரங்களைப் பெறுவதிலும் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்த முதலாளிகள் / நிறுவனங்கள், இதன் காரணமாக கூட்டு விருப்பப் படிவத்தை விரைவாக தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறினர்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைச் சரிபார்ப்பதற்காக (வெரிஃபை செய்வதற்காக) செப்டம்பர் 29, 2023 வரை 5.52 லட்சம் விண்ணப்பங்கள் முதலாளிகள் / நிறுவனங்களிடம் நிலுவையில் இருந்தன.
இந்தக் கோரிக்கையை பரிசீலித்த பிறகு, EPFO வாரியத்தின் தலைவர், முதலாளிகள் சம்பள விவரங்கள் போன்றவற்றைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்தார்.