ஏடிஎம்மில் மின்சார கட்டணம் கட்டலாம்! தெரிந்து கொள்ளுங்கள்
ஏடிஎம் என்பது பணம் எடுக்கும் ஒரு இயந்திரம் என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், பணம் எடுப்பதைத் தவிர, அதை மேலும் பலவிதங்களில் பயன்படுத்தலாம் என்பது பலருக்கும் தெரியவில்லை.
அதுமட்டுமின்றி வங்கிக்கு நேரடியாக போகாமலேயே, வங்கிச் சேவைகளை ஏ.டி.எம்களிலேயே பெறலாம். பணத்தை வேறொரு கணக்குக்கு மாற்ற விரும்பினால், அதை ஏடிஎம்மிலிருந்து செய்யலாம்.
அதேபோல ஏடிஎம்மிலேயே மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் போன்ற பல பில்களை செலுத்தலாம். இந்த வசதி எஸ்பிஐ உட்பட பல வங்கிகளின் ஏடிஎம்களில் கிடைக்கிறது. கிரெடிட் கார்டு பில்லையும் ஏடிஎம் மூலமாகவே செலுத்தலாம்.
பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் வங்கிகணக்கில் டெபாசிட் செய்ய வங்கிக்கு போக வேண்டிய அவசியமும் கிடையாது. ஏடிஎம்களில் பணம் எடுப்பதை போன்றே, பணத்தை போட முடியும்.
பணம் டெபாசிட் செலுத்தும் இயந்திரங்கள் தற்போது பல்வேறு நகரங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பணம் டெபாசிட் செய்ய பலரும் விரும்புவது உண்டு.
ஆனால் பலரால் அது முடியவில்லை. எனவே நீங்கள் வெள்ளிக்கிழமை அன்றே பணம் டெபாசிட் செய்வதோ அல்லது ஏடிஎம்களில் எடுப்பதோ நல்ல வாய்ப்பாகும்.