வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் கடன் வாங்க சிபில் ஸ்கோர் அவசியம். சிபில் கம்மியாக இருந்தால் கடன் நிராகரிக்கப்படும்.
பலருக்கும் இந்த பிரச்சனை இருந்து வருகிறது. நல்ல சிபில் ஸ்கோர் இருந்தால் கடன் உடனடியாக இருக்கும்.
அனைத்து வங்கி மற்றும் கடன் தரும் நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கியவர்களின் விவரங்களை சிவில் நிறுவனத்திற்கு கொடுத்து விடும். இதன் அடிப்படையில் சிவில் ஸ்கோர் நிர்ணயம் செய்யப்படும்.
ஒருவரது சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். 750 முதல் 900 வரை இருந்தால் அது சிறந்த சிபில் ஸ்கோர்.
நீங்கள் ஏற்கனவே வாங்கிய கடன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தினாலே சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்.
மாத இஎம்ஐ மற்றும் மினிமம் பேலன்சை முறையாக பராமரித்து வந்தால் கிரெடிட் ரிப்போர்ட்டில் நெகடிவ் மார்க் இருக்காது.
அதே போல கிரெடிட் கார்டில் உள்ள லிமிட்டை மீறினால் அதை கட்டுவதில் சிரமப்படுவீர்கள். இதன் காரணமாக கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படலாம்.
நிறைய இடத்தில் கடன் வாங்கினாலும், கடனுக்கு விண்ணப்பித்தாலும் சிபில் ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளது.
மேலும் நீங்கள் வாங்கிய பழைய கடன் எதுவும் நிலுவையில் இருந்தால் அதனை செட்டில்மெண்ட் செய்வது நல்லது.