நாம் தினமும் உட்கொள்ளும் காய்கறிகளில் அதிக அளவில் நாட்ச்சத்து, மக்னீசியம், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றன.
காய்களில் பாகற்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த மிகவும் சிறந்த காயாக கருதப்படுகின்றது. தினமும் காலையில் பாகற்காய் சாறு அருந்துவது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
சுரைக்காயில் 92% நீர்ச்சத்தும் 8% நார்ச்சத்தும் உள்ளது. காலையில் சுரைக்காய் சாறு குடிப்பது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகள் ஏராளமாக உள்ளன. இதை தினமும் இரவில் ஊற வைத்து காலையில் அதன் நீரை குடிக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.
ஆளி விதைகளில் நார்ச்சத்து அதிகமாகவும் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும் உள்ளது. ஆகையால் ஆளி விதைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, மெக்னீசியம் போன்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் தினமும் இதை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.