சென்னை மெட்ரோ சொன்ன குட்நியூஸ்!

';


சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆட்டோமேடிக் கட்டண வசூல் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

';


இதன் காரணமாக, சென்னை மெட்ரோவில் ஸ்டேடிக் க்யூஆர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறும் சேவையில் 31.03.2024 ஆம் தேதி பிரச்சனை ஏற்பட்டது.

';


அன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அந்த பிரச்சனை இருந்தது. அதேபோல், 01.04.2024 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தடை ஏற்பட்டது.

';


இந்த நேரத்தில் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

';


இது குறித்து சென்னை மெட்ரோ இப்போது விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறது. க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு மீண்டும் பணம் கொடுக்கப்படும்.

';


க்யூஆர் கோடு மூலம் பயணச்சீட்டு பெறாதவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் நடவடிக்கை தொடங்கியிருப்பதாக சென்னை மெட்ரோ தெரிவித்துள்ளது.

';


அதிபட்சம் இன்னும் இரண்டு நாட்களில் பணத்தை செலுத்தியவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படும் எனவும் சென்னை மெட்ரோ அறிவித்திருக்கிறது.

';


மேலும், ​பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருந்துவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

';

VIEW ALL

Read Next Story