தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தினம் ரூ.417 என்ற அளவில் முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆகலாம்.
PPF திட்டத்தில் நீங்கள் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி கிடைக்கும், மேலும் இது ஒவ்வொரு ஆண்டும் கூட்டு வட்டியின் பலனையும் வழங்குகிறது.
PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் என்றாலும், 5-5 ஆண்டுகளுக்கு இரண்டு முறை நீட்டிக்கலாம். இதனுடன், வரிச் சலுகையும் கிடைக்கும்.
பிபிஎப் கணக்கில், ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் அதாவது தினம் ரூ.417 என்ற அளவில் 15 ஆண்டிகளுக்கு டெபாசிட் செய்தால், மொத்த முதலீடு 22.50 லட்சமாக இருக்கும்.
முதிர்வு காலத்தில், வட்டியாக மட்டும் ரூ.18.18 லட்சம் கிடைக்கும். அதாவது மொத்தம் 40.68 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
பிறகு 5-5 ஆண்டுகள் என இரண்டு முறை முதலீட்டை தொடர்ந்தால், ரூ.65.58 லட்சம் கிடைக்கும். அதாவது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் ரூ.1.03 கோடி இருக்கும்.
PPF கணக்கை , சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் உட்பட எந்தவொரு குடிமகனும் அஞ்சல் அலுவலகத்தின் PPF இல் கணக்கைத் தொடங்கலாம்.