உடல் பருமனை குறைக்க முயற்சிக்கும் போது காலை உணவில் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
பர்கர், மஃபின், பேஸ்ட்ரி, போன்றவற்றில் சர்க்கரை, கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை அதிகம். எனவே, காலை உணவுக்கு அவை மோசமான தேர்வாகும்.
வெள்ளை பிரெட்டில் நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளதால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே பசியை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம், கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகம். உடல் பருமன் குறைய இவை உதவாது.
சாண்ட்விச்களில் அதிக கலோரிகள், சோடியம், நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை அதிக உள்ளதால் உடல் பருமன் அதிகரிக்கும்
பேக்கேஜ் செய்யப்பட்ட ரெடி டு ஈட் தானியங்களில் சர்க்கரை மிக அதிகமாகவும், புரதம், நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால், உடல் எடை அதிகரிக்கும்
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.