இரவில் 'ரயிலில்' போறீங்களா.. இதை நோட் பண்ணிக்குங்க
இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.
ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது.
பயணிகள் நிம்மதியாக உறங்குவதை உறுதி செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே இரவு விதிகளை புதுப்பித்துள்ளது.
இரவில் பயணிக்கும் பயணிகள் இந்த விதிகளை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
இரவு நேர விளக்கு தவிர, எந்த விளக்குகளையும் பயன்படுத்த அனுமதி இல்லை.
இரவு 10 மணிக்குப் பிறகு பயணிகள் சத்தமாகப் பேச அனுமதி இல்லை.
மிடில் பெர்த் பயணிகள் தங்கள் இருக்கையைத் திறப்பதை லோயர் பர்த் சக பயணிகளை நிறுத்த முடியாது.
ஆன்லைன் உணவு சேவைகள் இரயிலில் இரவு 10 மணிக்குப் பிறகு உணவு வழங்க முடியாது.
இ-கேட்டரிங் சேவைகள் மூலம் இரவிலும் இரயிலில் உங்கள் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.
இரவு 10 மணிக்குப் பிறகு, TTE பயணிகளின் டிக்கெட்டை செக் செய்ய முடியாது.