வருமான வரி தாக்கல் செய்யும் போது பொதுவாக நடக்கும் தவறுகளை தவிர்த்தால் எந்த விதமான பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது.
ஐடிஆர் தாக்கலில் தவறான மதிப்பீட்டு ஆண்டைத் தேர்ந்தெடுப்பது பல வித சிக்கல்களை ஏற்படுத்தும்.
வரி செலுத்துவோர் தங்களுக்கு பொருந்தும் சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். இதற்கு ஒரு நிபுணரிடம் உதவி பெறலாம்.
வரி செலுத்துவோர் தங்களுக்கு சம்பளம், வட்டி வருமானம், என கிடைக்கும் அனைத்து வகை வருமானத்தையும் குறிப்பிடுவது முக்கியம்.
வரி செலுத்துவோரின் TDS மற்றும் TCS பற்றிய தகவல்கள் படிவம் 26AS-ல் இருக்கும். இவற்றை உங்கடம் உள்ள விபரங்களுடன் சரி பார்ப்பது முக்கியம்.
வெளிநாடு ஆதாரம் மூலம் சொத்து அல்லது வருமானம் இருந்தால், அதை ITR படிவத்தில் குறிப்பிட மறக்காதீர்கள்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பிறகு, விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டியது கட்டாயமாகும்.