மனிதர்களையே கேன்வாஸாக பயன்படுத்தும் ஓவியத் திருவிழா!
வித்தியாசமான ஓவியப் போட்டியின் சுவாரசியங்கள்
உடல் மற்றும் முகத்தில் ஓவியம் வரையும் போட்டி! மனிதர்களையே கேன்வாஸாக பயன்படுத்தும் போட்டி
இந்த பாடி பெயிண்டிங் திருவிழாவில் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கலைஞர்கள் கலந்துக் கொள்கின்றனர்
மேக்கப், UV விளைவுகள் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்களுடன் ஓவியத்தை உருவாக்க முகத்தையும் உடலின் மற்ற பகுதிகள் கேன்வாஸ் போல பயன்படுத்தப்படுகிறது
1990 களின் பிற்பகுதியில், ஆஸ்திரிய அலெக்ஸ் பெர்ண்ட்ரெட் 1970களின் ஜெர்மன் மாடல் வெருஸ்காவின் ஃபேஷன் புகைப்படங்களைக் கண்டு ஆர்வம் அடைந்தார்
1998 முதல், ஐரோப்பாவில் முதல் உடல் ஓவியம் திருவிழாவைக் கொண்டுவர முடிவு செய்தார்.
உலக உடல் ஓவியத் திருவிழா, தெற்கு ஆஸ்திரியாவின் கிளாகன்ஃபர்ட்டில் கொண்டாடப்படுகிறது
தூரிகைகள், கடற்பாசிகள், ஏர்பிரஷிங் ஆகியவறை பயன்படுத்துகின்றனர்
இசை விழா, உணவு சந்தை மற்றும் முக்கிய போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு வாரம் பட்டறைகள் என நாடே களைகட்டுகிறது
வெளிநாட்டினரிடையே வரவேற்பை பெற்றிருப்பதால், பலர் இதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரியாலிட்டி டிவி ஷோக்களும் தொடங்கிவிட்டன