மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும் ஒரு நோயாகும்.
மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல், நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல், உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம் போன்ற பல காரணங்களால் இந்த நோய் உண்டாகிறது.
பைல்ஸ் அல்லது மூல நோய் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவை ஏற்படும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், காரமான உணவுகள், பால் பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அதிக உப்பு ஆகியவற்றை உணவில் உட்கொள்வது மூல்நோய்க்கு வழிவகுக்கிறது.
மூல நோயால் அவதிப்படுபவர்கள் இஞ்சியை உட்கொள்வதால், மலத்துடன் இரத்தம் வர வாய்ப்புள்ளது.
கருமிளகு இயற்கையில் உடலுக்கு சூட்டை கொடுக்கும் மசாலா. மூல நோய் இருப்பவர்களுக்கு இதனால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
ஆல்கஹால் உடலில் நீரிழப்பு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும், இது மூல நோய் விரிவடைவதற்கு ஒரு பொதுவான காரணமாகும்.
மூல நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கள் உணவில் மிளகாயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதிக மிளகாயினால் அதிக வலி மற்றும் எரியும் பிரச்சினைகள் ஏற்படும்.