ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ நேற்று (mee 15, 2024) கொடூர கொலை தாக்குதலை எதிர்கொண்டார். மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இவரைப் போல
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி நவம்பர் 22, 1963 அன்று டெக்சாஸ் மாநிலத்தில் படுகொலை செய்யப்பட்டார், இதுவரை அவரது கொலை மர்மமாகவே இருந்து வருகிறது
ஹைட்டி ஜனாதிபதி ஜோவெனல் மொய்ஸ் ஜூலை 7, 2021 அன்று நள்ளிரவில் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அவரது வீட்டில் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த கொலை தொடர்பாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. ஜனாதிபதியின் மனைவி மார்ட்டின் மொய்ஸ், முன்னாள் ஹைட்டி பிரதம மந்திரி கிளாட் ஜோசப்புடன் சதி செய்து கணவரை கொன்றதாக நீதிபதி வால்டர் வெசர் வால்டேரின் 122 பக்க ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஜூலை 2022 இல் படுகொலை செய்யப்பட்டார். தாக்குதல் நடத்தியவர் சுட்டதில், ஒரு குண்டு அவரது மார்பையும், மற்றொன்று அவரது கழுத்திலும் தாக்கியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
நவம்பர் 3, 2022 அன்று, பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ராணுவத்தின் ஆதரவை இழந்து ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கான், இடைக்காலத் தேர்தல் கோரிக்கைக்கு ஆதரவு திரட்டி வந்த போது இந்த தாக்குதல் நடைபெற்றது
மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று நாதுராம் கோட்சே என்பவரால் பொதுவெளியில் சுட்டுக்கொல்லப்பட்டார். 1934 ல் இருந்து தொடர்ந்து 5 முறை நடைபெற்ற கொலை முயற்சிகளில் தப்பித்த அவர், 6 வது முறை கொலை செய்யப்பட்டார் .
1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் காலை 09:20 மணியளவில், டெல்லியில் தனது வீட்டில் இருந்த பிரதமர் இந்திராகாந்தியை அவரது இரு பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர்
படுகொலை செய்யப்பட்ட இந்திரா காந்தியின் மகனும் இந்தியப் பிரதமராக பதவி வகித்தவருமான ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்