தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது, அனைத்து வித நோய்களுக்கும் சர்வரோக நிவாரணியாக செயல்படும்
பூண்டு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது.
பல்வலி ஏற்படும்போது, பூண்டை நன்றாக அரைத்து வலி இருக்கும் இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு ரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, ரத்த அழுத்த மருந்துகளினால் ஏற்படுகிற பக்க விளைவுகளையும் குறைக்கிறது.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால், இதயக் குழாய்களில் கொழுப்பு சேராது.
உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகரிப்பதால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்பை பூண்டு சரிசெய்கிறது.
வயிற்றில் ஏதேனும் பிரச்சினை இருந்தால், நீங்கள் பூண்டு, கல் உப்பு, நெய், பெருங்காயம் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம்.
காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது கொழுப்பை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பூண்டில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பூண்டின் ஒரு பல்லை சூடாக்கி, தினமும் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
பூண்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உங்களுக்கு இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
பூண்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.