UPI ATM என்றால் என்ன? பணம் எடுக்க கார்டு அவசியமில்லையா?
டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் கூட UPI ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்.
இந்தச் சேவையை அணுக, உங்களுக்கு UPI ஆப்ஸுடன் கூடிய ஸ்மார்ட்போன் மற்றும் பதிவு செய்யப்பட்ட UPI ஐடி தேவைப்படும்.
UPI செயலியைக் கொண்டு பணம் எடுக்கும் அம்சம் உள்ள ஏடிஎம்-க்கு நீங்கள் செல்ல வேண்டும்.
உங்கள் மொபைல் பேங்கிங் செயலியைத் திறந்து, உள்நுழைந்து, UPI Cash Withdrawal விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ATM ஒரு தனித்துவமான QR குறியீட்டை உருவாக்குகிறது.
இது உங்கள் UPI செயலியின் மூலம் ஸ்கேன் செய்து, மொபைலின் பின்னை உள்ளிட்ட வேண்டும். அதன் பின் தேவையான பணத்தை உள்ளிட வேண்டும்.
அதன்பின் யுபிஐ ஏடிஎம்களில் இருந்துபணம் வரும். இந்தப் பணப்பரிவர்த்தனை மிகவும் பாதுகாப்பானது. மொபைல் கட்டாயம் நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
பணத்தை எடுத்த பிறகு, உங்கள் மொபைல் பயன்பாட்டில் டிஜிட்டல் ரசீது அல்லது உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறலாம்.