உலர் பழங்களை ஊற வைத்து சாப்பிட்டால், அவை மிருதுவாகி உட்கொள்ள எளிதாவதுடன் செரிமானமும் எளிதாகிறது.
உலர் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை பலப்படுத்த உதவுகின்றன.
உலர் பழங்களில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள் உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைத்து கீல்வாதம் போன்ற நோய்களின் ஆபத்தை குறைக்க உதவுகின்றன.
உலர் பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் சரும பாதுகாப்பிற்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.
ஊற வைத்த உலர் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரிய பலத்தை அளிக்கின்றன.
உலர் பழங்களில் அதிக அளவு கால்சியம் உள்ளன. இவை எலும்பு பாதுகாப்பிற்கு நல்லது.
உலர் பழங்களில் உள்ள இயற்கையான சர்க்கரை உடலின் ஆற்றலை அதிகரித்து நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்புடன் வைக்கிறது.
ஊற வைத்த உலர் பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளை செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.