3 லட்சம் பேர் வாங்கிய பைக் இது தான்! விற்பனையில் டாப்
கடந்த 2023 செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவின் சிறந்த விற்பனை இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் உள்ளது.
இந்த வாகனம் 3,19,692 யூனிட்களின் விற்பனை கடந்த மாதத்தில் விற்பனையாகி முதல் இடத்தில் உள்ளது. இந்த வகையில், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை இந்த ஆண்டு 9.99% அதிகரித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட 2,89,930 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 2-வீலராக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2வது இடத்தை பிடித்துள்ளது.
ஆனால், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 2022 செப்டம்பரை விட, கடந்த செப்டம்பர் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.
ஏனெனில், 2022 செப்டம்பரில் 2,45,607 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் அதனை காட்டிலும் 4.30% குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
3வது இடத்திலும் ஹோண்டா தயாரிப்பாக, ஷைன் மோட்டார்சைக்கிள் உள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஷைன் பைக்குகளின் எண்ணிக்கை 1,61,544 ஆகும்.
4வது இடத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகள் 1,20,126 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. 2022 செப்டம்பரிலும் பல்சர் பைக்குகளின் விற்பனை 1 இலட்சத்தை தாண்டியது என்றாலும், கடந்த 2023 ஆகஸ்ட்டில் 90,685 பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது.
இந்த லிஸ்ட்டில் 5வது மற்றும் 6வது இடங்களில் ஹீரோ மோட்டோகார்பின் எச்.எஃப் டீலக்ஸ் பைக்கும், டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் உள்ளன.
பிரபலமான ஸ்கூட்டரான சுஸுகி ஆக்ஸஸ் 57,041 யூனிட்கள் விற்பனை உடன் 7வது இடத்தை தனதாக்கி உள்ளது.
8வது மற்றும் 9வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கைகளுடன் டிவிஎஸ் ரைடர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் உள்ளன.
கடைசி 10வது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்.எல் உள்ளது.