பெஸ்ட் பவுர்புல் என்ஜின் பைக்குகள் லிஸ்ட்..!
3 லட்சம் ரூபாய்க்குள் இப்போது விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் பவரை வெளியேற்றக் கூடிய பெஸ்ட் பைக்குகளின் லிஸ்டை பார்க்கலாம்
2024 கேடிஎம் 250 ட்யூக் (2024 KTM 250 Duke): இந்த பைக் அதிகபட்சமாக 31 எச்பி வரை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கில் 250 சிசி மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடையே 163 கிலோ மட்டுமே ஆகும். இந்த பைக்கிற்கு 2.39 லட்ச ரூபா விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
எஞ்ஜின் திறன் விஷயத்தைப் போலவே சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த பைக் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. 5 அங்குல எல்சிடி திரை, பன்முக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
செல்போனுக்கு வரும் அழப்பை ஏற்றல், மியூசிக்கை பிளே செய்வது, நேவிகேஷன் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் இணைப்பு என ஏகப்பட்ட அம்சங்களை தாங்கியதாக இந்த பைக் காட்சியளிக்கின்றது.
ஹோண்டா சிபி 300ஆர் (Honda CB300R): கேடிஎம் 250 ட்யூக்கைக் காட்டிலும் சற்று காஸ்ட்லியான பைக்கான இது இருக்கின்றது.
இதன் விலை ரூ. 2.40 லட்சம் ஆகும். இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எஞ்ஜின் அதிகபட்சமாக 31 எச்பி வரை வெளியேற்றும். இந்த பைக்கின் ஒட்டுமொத்த எடை 146 கிலோ ஆகும்.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 (TVS Apache RTR 310): இந்த பைக்கில் டிவிஎஸ் நிறுவனம் 312 சிசி எஞ்ஜினை பயன்படுத்தி இருக்கின்றது.
இது ஓர் பவர்ஃபுல் மோட்டாராகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 35.6 எச்பி பவரை வெளியேற்றும்.
இதன் விலை ரூ. 2.43 லட்சம் ஆகும். கவர்ச்சியான தோற்றம் மற்றும் நவீன சிறப்பம்சங்கள் என அனைத்திலும் மிக சிறந்ததாக இந்த பைக் காட்சியளிக்கின்றது.
டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் (Triumph Scrambler 400 X): மேலே மூன்று பைக்குகளைக் காட்டிலும் மிக மிக அதிக பவரை வெளியேற்றும் மோட்டார்சைக்கிளாக இந்த ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் இருக்கின்றது.
இதில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் அதிகபட்சமாக 40 எச்பி பவரை வெளியேற்றும். ஆஃப்-ரோடு பயணத்திற்கு உகந்த மோட்டார் சைக்கிள் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 2.63 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கேடிஎம் 390 அட்வென்சர் எக்ஸ் (KTM 390 Adventure X): அட்வென்சர் பயணத்திற்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பைக் மாடலே இது ஆகும்.
இதன் விலை ரூ. 2.80 லட்சம் ஆகும். இந்த பைக்கில் கேடிஎம் நிறுவனம் அதிக பவர்ஃபுல் மோட்டாரான 373 சிசி எஞ்ஜினை பயன்படுத்தி இருக்கின்றது.
இதனால் 43.5 எச்பி பவரையும், 37 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும்.