டெல்லி ஒற்றைப்படை இரட்டைப்படை விதி - தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

Sudharsan G
Nov 08,2023
';

மாசுபாடு

மாசுக் கட்டுப்பாடு காரணமாக கார்களில் ஒற்றைப்படை, இரட்டைப்படை விதி டெல்லி அரசால் அமல்படுத்தப்பட உள்ளது.

';

எப்போது முதல்?

இந்த விதி வரும் நவ.13ஆம் தேதி முதல் நவ. 20ஆம் தேதி வரை அதாவது ஒரு வார காலத்திற்கு அமலில் இருக்கும்.

';

நேரம்

இது காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரை அமலில் இருக்கும்.

';

ஒற்றைப்படை நாள்கள்

இந்த நாள்களில் கார்களின் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் ஒற்றைப்படையாய் (1, 3, 5, 7, 9) இருந்தால் மட்டுமே அந்த கார்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.

';

இரட்டைப்படை நாள்கள்

இந்த நாள்களில் கார்களின் பதிவு எண்ணின் கடைசி இலக்கம் இரட்டைப்படையாய் (0, 2, 4, 6, 8) இருந்தால் மட்டுமே அந்த கார்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும்.

';

நீட்டிப்பு?

இது நவ. 20ஆம் தேதிக்கு பின் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

';

விதிவிலக்கு

ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும், மகளிர் ஓட்டுநர்களுக்கும் மட்டும் சில விதிவிலக்குகள் வழங்கப்படுகின்றன.

';

அபராதம்

கடந்த முறை இந்த விதி அமல்படுத்தப்பட்டபோது, இதனை மீறியவர்களுக்கு தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

';

VIEW ALL

Read Next Story