நீங்கள் கிளிக் செய்தவுடன் திரைப்படம் உடனடியாகப் பதிவிறக்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு வைஃபை இணைப்பு வேகமாக வேலை செய்ய வேண்டுமானால், Wi-Fi ரூட்டரை அமைத்து, அற்புதமாகப் பாருங்கள்,
திசைவி என்று தமிழில் சொன்னால் அனைவருக்கும் புரியாது. ரவுட்டர் எனப்படும் திசைவியை வீட்டின் நடுவில் அல்லது உயரமான இடத்தில் வைக்கவும், இதனால் சமிக்ஞை எல்லா இடங்களிலும் நன்றாக சென்றடையும்
ரூட்டரின் ஃபார்ம்வேரைப் புதுப்பிக்கவும். புதிய ஃபார்ம்வேரில் பிரச்சனை இருந்தாலும் சிக்னல் சரியாக கிடைக்காமல் வைஃபை சரியாக வேலை செய்யாது
டூயல்-பேண்ட் ரூட்டரைப் பயன்படுத்தவும். அதிலும், 5GHz பேண்டைப் பயன்படுத்தவும். இது 2.4GHzவை விட சிறந்தது மற்றும் வேகமான வேகத்தை வழங்குகிறது.
உங்கள் வீடு பெரியதாக இருந்தால், வைஃபை எக்ஸ்டெண்டரைப் பயன்படுத்தி சிக்னலை அதிகரிக்கலாம்
வைஃபை நெட்வொர்க்குடன் அதிக சாதனங்கள் இணைக்கப்பட்டால், வேகம் குறையும். எனவே தேவையற்ற சாதனங்களின் இணைப்பை துண்டிக்கவும்.
இந்த அனைத்தும் செய்து பார்த்துமே, வைஃபை வேகமாக இல்லை என்றால், நீங்கள் தேர்ந்தெடுத்த இணையத் திட்டத்தில் குறைந்த வேகம் இருக்கலாம் அல்லது சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருக்கலாம்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை