அதிகரித்து ரயில் விபத்துகளைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக ரயில்வே ரயில் என்ஜின்கள் மற்றும் முக்கியமான யார்டுகளிலும் AI தொழில்நுட்பத்துடன் கூடிய CCTV கேமராக்களை பொருத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 'செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சிசிடிவி கேமராக்களை நிறுவ இந்தியன் ரயில்வே திட்டமிட்டிருக்கிறது
ரயில்வே விபத்துகள் தொடர்பாக, ரயில்வே வாரியத் தலைவர் ஜெயவர்மா சின்ஹா இந்தத் தகவலைத் தெரிவித்தார்
எதிர்வரவிருக்கும் கும்பமேளாவின்போது அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தண்டவாளங்களை தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் ரயில்வேத்துறை உயரதிகாரி தெரிவித்தார்
பிரயாக்ராஜ் (அலகாபாத்) மகா கும்பமேளாவிற்கான ரயில்வேயின் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. கும்பமேளாவிற்கு முன்னதாக உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் திறன் விரிவாக்க திட்டங்கள் நிறைவடையும் என்று கூறப்படுகிறது
கடந்த கும்பமேளா 2019ம் ஆண்டில் நடைபெற்றபோது, முக்கியமான நாட்களில் இந்தியன் ரயில்வே சுமார் 530 சிறப்பு ரயில்களை இயக்கியது.
அடுத்த ஆண்டு கும்பமேளாவின்போது முக்கிய நாட்களில் சுமார் 900 சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கும்பமேளாவிற்கு 30 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது
ரயில்வே வாரியத்தின் தலைவர், வட மத்திய ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் வடகிழக்கு ரயில்வே பொது மேலாளர்கள் மற்றும் இந்த மண்டலங்களுக்கு உட்பட்ட கோட்டங்களின் டிஆர்எம்கள், வரவிருக்கும் கும்பமேளாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்