வட இந்தியாவில் உறவுகளை பிணைக்கும் பண்டிகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு, அதில் முக்கியமானது ராக்கிக்கயிறு கட்டும் ரக்ஷா பந்தன் பண்டிகை...
தொப்புள் கொடி உறவுகளை என்றென்றும் பாசப்பிணைப்புடன் இருக்க வைப்பதற்காக அனுசரிக்கப்படும் பண்டிகை ரக்ஷா பந்தன்
ரக்ஷா பந்தன் பண்டிகை நாளன்று, சகோதரர்களுக்கு சகோதரிகளில் கையில் கயிறு கட்டி, அவர்களை நீடூழி வாழ வாழ்த்தி பிரார்த்திப்பார்கள்
தங்கள் சகோதரிகளை என்றென்றும் பாதுகாப்பதாக சகோதரர்கள் உறுதி பூணுவார்கள்
தற்போது வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள், ராக்கிப் பண்டிகையன்று சந்திக்க முடியாவிட்டாலும் ராக்கிக்கயிறையாவது அனுப்ப விரும்புகின்றனர்
ரக்ஷாபந்தன் சிறப்பு சர்வதேச டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ள பிளிங்கிட், வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி மற்றும் பரிசுகளை பிளிங்கிட்டில் ஆர்டர் செய்தால் அவை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று கூறுகிறது
அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு ராக்கி மற்றும் பரிசுகளை அனுப்பலாம்
இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரக்ஷாபந்தன் நாள் வரை மட்டுமே பொருந்தும்.