காலையில் சாப்பிடாமல் இருக்க கூடாது. இதனால் உடலின் ஆற்றல் குறைந்து, மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.
காலையில் சர்க்கரை அதிக நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
முடிந்தவரை காலையில் இயற்கை சார்ந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
காலையில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் வேகமாக சாப்பிட கூடாது. இது செரிமானத்தை பாதிக்கும்.
காலையில் புரதம் இல்லாத உணவை சாப்பிடும் போது மீண்டும் பசிக்க ஆரம்பிக்கும். எனவே முட்டை, நட்ஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
காலையில் உணவில் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொள்வது உடலில் நார்சத்தை அதிகரிக்கும்.
காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவை வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.