தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த இரு வாரங்களுக்கு எந்த ரயிலிலும் டிக்கெட் இருக்காது.
இந்த மாதிரி நேரத்தில் நீங்கள் ரயிலில் Tatkal டிக்கெட் அல்லது சிறப்பு ரயில் டிக்கெட்டை நீங்கள் முன்பதிவு செய்யலாம்.
பயணத்திற்கு ஒருநாள் முன் நீங்கள் Tatkal டிக்கெட்டை புக் செய்யலாம். தினமும் 11 மணிக்கு Tatkal டிக்கெட் தொடங்கப்படும். இருப்பினும், அது விரைவாகவே தீர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் IRCTC செயலியிலோ அல்லது தளத்திலோ டிக்கெட் முன்பதிவு செய்யும்முன் மாஸ்டர் லிஸ்டை தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
அதாவது, அதற்கு பயணிகளின் ஆதார் கார்ட், பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தேவையாகும்.
Tatkal சாளரம் திறந்த உடன் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் ரயிலை தேர்வு செய்து உடனே மாஸ்டர் லிஸ்டை கிளிக் செய்யவும்.
இதனால், பயணிகள் இடத்தில் நீங்கள் மாஸ்டர் லிஸ்டில் குறிப்பிட்ட தகவல்கள் தானகவே நிரப்பப்படும். பின்னர் நீங்கள் Pay Later Payment ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
இதற்கு 30 வினாடிகள்தான் எடுக்கும். உங்கள் டிக்கெட் உறுதியாக அதிக வாய்ப்புள்ளது.