சிறந்த அம்சங்கள் கொண்ட உயர்தர பிரீமியம் போன்களை வாங்க நினைக்கும் நடுத்தர மக்களுக்கு EMI வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது உண்மை தான்.
எனினும், EMI வசதியை பயன்படுத்திக் கொண்டு போன் வாங்கும் போது சில விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும்.
ஸ்மார்ட்போன் வாங்க நீங்கள் நிர்ணயித்துள்ள பட்ஜெட் என்ன என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.
மற்றவர்களிடம் உங்கள் போன் என்ன என்பதை ஆராயாமல், உங்கள் தேவை மற்றும் நிதி நிலைக்கு ஏற்ற வகையில் உள்ள ஸ்மார்போன் மாடலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
EMI வசதி உள்ள கார்டை பயன்படுத்தும் போது No Cost EMI திட்டங்களில் வட்டியில்லா மாதாந்திர தவணைகளில் பணம் செலுத்தும் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
ஆனால், No Cost EMI திட்டங்களில் மறைமுக கட்டணம் ஏதேனும் வசூகிலிக்கப்படுகிறதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.
போனுக்கான இஎம்ஐ தொகையை சரியான நேரத்தில் கட்டவில்லை என்றாலோ, அல்லது இஎம்ஐ செலுத்தவில்லை என்றாலோ, உங்கள் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும்.
சிலர் பணத்தை மிச்சப்படுத்த காப்பீடு எடுக்க வேண்டாம் என நினைப்பதுண்டு. ஆனால், காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. எனினும், காப்பீட்டில் எதற்கெல்லாம் கவரேஜ் உள்ளதை என்பதை அறிந்து கொண்டு முடிவெடுப்பது நல்லது.