ஆதார் பயோமெட்ரிக் எவ்வாறு அப்டேட் செய்வது?
உங்கள் அருகில் உள்ள ஆதார் மையம், தபால் நிலையம், இ-சேவை மையங்களுக்கு செல்லவும்.
ஆதார் Enrolment/ அப்டேட் விண்ணப்பத்தை பெற்று நிரப்ப வேண்டும்.
அதை ஆதார் மைய நிர்வாகியிடம் கொடுத்து உங்கள் ஆதார் விவரங்களை கூற வேண்டும்.
இப்போது உங்கள் பயோமெட்ரிக் டேட்டா கைரேகை (fingerprints) அல்லது கண் (iris) ஸ்கேன் செய்யப்படும்.
ஆதார் மைய நிர்வாகி உங்கள் ஆதார் விவரங்களை சரிபார்த்து UIDAI தளத்தில் அப்டேட் செய்வார். அவ்வளவு தான்.
சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.
பெரும்பாலான ஆதார் அப்டேட் சேவைகள் ஆதார் மையம், தபால் நிலையங்களில் மட்டுமே செய்யப்படுகிறது. சிறிய அளவிலான சேவைகளுக்கு மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும்.