Google Search History-ஐ முழுசா டெலிட் செஞ்சிடாதீங்க
ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் கூகுள் ஆப்பை (Google App) இன்ஸ்டால் செய்து வைத்திருப்பீர்கள். அவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக கூகுள் வழியாக நீங்கள் எதையெல்லாம் தேடினீர்கள் என்கிற தடயத்தை 'ஸ்மார்ட்' ஆக அழிக்க விரும்புகிறீர்களா?
ப்ரைவஸி (Privacy) காரணங்களுக்காக, கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை (Search History) டெலிட் செய்பவர் என்றால் நீங்கள் கட்டாயம் இந்த டிரிக்ஸை தெரிந்துகொள்ள வேண்டும்
உங்களுடைய ஸ்மார்ட்போனையும், அதிலுள்ள கூகுள் ஆப்பையும் உங்களை தவிர்த்து வேறு யாருமே பயன்படுத்த மாட்டார்கள் என்றால், நீங்கள் என்னவெல்லாம் சேர்ச் செய்தீர்கள் என்கிற எந்த விவரங்களையுமே டெலிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை!
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட்போனையும் அதிலுள்ள கூகுள் ஆப்பையும், உங்களை போலவே உங்கள் வீட்டில் உள்ளவர்களோ அல்லது உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ பயன்படுத்துவார்கள் என்றால், கூகுள் சேர்ச் ஹிஸ்டரியானது கட்டாயம் அழிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கும். இந்த இடத்தில் தான் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க தவறுகிறோம்.
அது என்னவென்றால் - நம்மை போலவே மற்றவர்களும் கூட தங்களுடைய கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை டெலிட் செய்கிறார்கள். அதாவது அவர்களுக்கும் ப்ரைவஸி உண்டு; அதை அவர்களும் மறைக்க விரும்புகிறார்கள் என்று அர்த்தம். ஆக நீங்களும் அதையே செய்தால், அதாவது உங்களுடைய சேர்ச் ஹிஸ்டரியை முழுதாக டெலிட் செய்து இருந்தால்.. அதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியும். அப்படித்தானே?
இந்த இடத்தில் தான் நீங்கள் உங்களுடைய கூகுள் சேர்ச் ஹிஸ்டரியை மிகவும் ஸ்மார்ட் ஆன வழியில் டெலிட் செய்ய வேண்டும். அதாவது கூகுள் ஆப்பில் கடைசியாக நீங்கள் சேர்ச் செய்த விஷயங்களை மட்டும் டெலிட் செய்துவிட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்கள் சேர்ச் ஹிஸ்டரி முழுமையாக அழிக்கப்படாது; மற்றவர்களால் உங்கள் மீது சந்தேகப்படவும் முடியாது!
இந்த விஷயத்தில் கூகுளே நமக்கு கைகொடுக்கும். உங்கள் சேர்ச் ஹிஸ்டரியின் கடைசி 15 நிமிடங்களை மட்டுமே டெலிட் செய்ய உதவும் ஒரு அம்சம் கூகுள் ஆப் செட்டிங்ஸ்-ல் உள்ளது. இதன் மூலம் நீங்கள் கடைசியாக சேர்ச் செய்த விஷயங்களை சட்டெனெ டெலிட் செய்ய முடியும்.
இதை செய்வதற்கு முன்பாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 2 முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதல் விஷயம்: டைம் லிமிட் (Time Limit).இந்த அம்சத்தின் கீழ் கடைசி 15 நிமிட சேர்ச் ஹிஸ்டரி மட்டுமே நீக்கப்படும். அதற்கு முன் நிகழ்த்தப்பட்ட தேடல்கள் எல்லாமே அப்படியே தான் இருக்கும்.
இரண்டாவது விஷயம்: டிவைஸ் இணக்கத்தன்மை (Device Compatibility). இந்த அம்சம் உங்கள் மொபைல் போனில் / ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் ஆப்பிற்கு மட்டுமே பொருந்தும். சரி வாருங்கள். கூகுள் ஆப்பில் "கடைசி 15 நிமிட சேர்ச் ஹிஸ்டரியை" டெலிட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உங்கள் போன் அல்லது டேப்லெட்டில் உள்ள கூகுள் ஆப்பை திறந்து, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். பின்னர் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் புகைப்படத்தை கிளிக் செய்யவும்.
அதனுள் சேர்ச் ஹிஸ்டரி என்கிற பிரிவின் கீழ் டெலிட் லாஸ்ட் 15 மினிட்ஸ் (Delete last 15 minutes) என்கிற விருப்பத்தை காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான், நீங்கள் கடைசி 15 நிமிடங்களுக்கு நீங்கள் தேடிய எல்லாமே கூகுள் சேர்ச் ஹிஸ்டரியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும்!