ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நம் எடை இழப்பு முயற்சியில் வெகுவாக உதவும்.
எவ்வளவு எடையை குறைக்க வேண்டும், எத்தனை நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள்
உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார ஆலோசகரை அணுகி, புரதச்சத்து, முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், இரும்புச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமச்சீர் உணவு அட்டவணையை பெற்றுக்கொள்ளுங்கள்
ஒரேயடியாக அதிக உணவை உட்கொள்ளாமல் அவ்வப்போது சிறுது சிறிதாக உணவு உட்கொள்வது தொப்பையை குறைக்க (Belly Fat Reduction) நல்லது.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என உணவு உட்கொள்ள ஒரு சரியான நேரத்தை ஒதுக்கி அதை கடைபிடிப்பது நல்லது.
எடையை குறைக்க வேண்டுமானால், கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு நோ சொல்லி விடுங்கள்.
சோடா, குளிர் பானங்கள் ஆகியவற்றை தவிர்த்து, நீர், கிரீன் டீ, வெந்தயம், தனியா, ஓம நீர் ஆகிய பானங்களை உட்கொள்வது உடல் எடையை குறைக்க (Weight Loss) நல்லது
பருப்பு வகைகள், மீன், பால், போன்றவற்றை சேர்த்து உங்கள் உணவில் புரதச்சத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்
ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் எவ்வளவு எடையை இழக்கிறீர்கள் என்பதை கவனமாக பார்த்து அதற்கேற்றபடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுங்கள்.