மொபைல் தொலைந்தாலோ அல்லது உங்களின் சிம் காணாமல் போனாலோ அதில் உள்ள தரவுகளை முடக்குவதற்கு தாமதமாகலாம். எனவே, சிம்மை லாக் செய்வது நல்லது. அதை எப்படி மேற்கொள்வது என இதில் காணலாம்.
மொபைல் தொலைந்தாலோ அல்லது உங்களின் சிம் காணாமல் போனாலோ அதில் உள்ள தரவுகளை முடக்குவதற்கு தாமதமாகலாம்.
உங்கள் ஸ்மார்ட்போனின் Settings பக்கத்திற்கு செல்லவும்.
தேடல் டேப்பில் 'Simcard Lock' என்று டைப் செய்யவும். திரையில் தோன்றும் Simcard Lock ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
சாம்சங் மொபைல் என்றால் 'Setup Simcard Lock' என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். அதில் இருந்து Simcard Lock ஆப்ஷனை தேர்வு செய்யவும்..
இப்போது, Default PIN நம்பரை கொடுக்கவும்.
அதன்பின், சிம்மை லாக் செய்ய புதிய PIN நம்பரை கொடுக்கவும்.
இதனால், போன் ஸ்விட்ச் ஆப் செய்து திரும்ப ஆன் ஆகும் போது PIN நம்பர் கேட்கும். எனவே, வேறு மொபைலில் PIN நம்பர் கொடுக்காமல் SIM வேலை செய்யாது.