உங்க ஊரின் காற்றின் தரத்தை காட்டும் கூகுள்..! எப்படி?

S.Karthikeyan
Nov 02,2023
';


நாட்டின் பல பகுதிகளிலும் காற்று மாசுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

';


டெல்லி, மும்பை, பெங்களூரு காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.

';


குறிப்பாக தலைநகர் டெல்லியில் டெல்லி என்சிஆர் பகுதியில் ஏற்கனவே காற்று மாசு அதிகரித்து, சுவாசிக்க சிரமமாக உள்ளது.

';


காற்று மாசுப்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும், அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

';


இந்த நிலையில் காற்று மாசுபாட்டில் இருந்து தப்பிக்க மக்களுக்கு உதவ, கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

';


அதன்படி பயனர்களுக்கு காற்றின் தரத்தை கண்காணிக்க உதவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது,

';


இது காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

';


டிஸ்கவர் டேபில் கூகுள் தளம், AQI எனப்படும் காற்று தர மதிப்பீடு குறித்த கார்டை வெளியிடுகிறது.

';


முகப்புத் திரையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள Google பயன்பாட்டில் பயனர்கள் இந்தப் புதிய டேபை பார்க்க முடியும்.

';


இருப்பினும், இந்த அம்சம் டேப்லெட்டுகளில் இன்னும் வழங்கப்படவில்லை.

';


மொபைல் சாதனங்களில், டிஸ்கவர் டேபில் காற்று தர மதிப்பீடு குறித்து ஒரு மினி கார்டை கூகுள் நிறுவனம் சேர்க்க உள்ளது.

';


மேலும் இது உள்ளூர் பகுதிக்கான நிகழ்நேர காற்றின் தர அப்டேட்களை காண்பிக்கும்

';


பயனர்கள் AQI மினி கார்டை கிளிக் செய்தால் போதும். இது டிஸ்கவர் தாவலில் காட்டப்படும் காற்றின் தரத் தரவுக்கான தேடலைத் தொடங்குகிறது.

';


மேலும் இது பயனர்கள் தங்கள் பகுதியில் உள்ள காற்றின் தரம் குறித்து தொடர்ந்து அறிய உதவுகிறது.

';


வெளியில் செல்வதற்கு முன் காற்றின் தரத்தை சரிபார்க்க இது ஒரு வசதியான வழியாகும்,

';


குறிப்பாக காற்று மாசுபாட்டிற்கு உணர்திறன் உள்ளவர்கள் அல்லது சுவாசப் பிரச்சனைகளால் போராடுபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story